Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி தேவையில்லாம வெளியில வர முடியாது….மொத்தம் 360 களப்பணியாளர்கள்…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று களப்பணியாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை  கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் களப்பணியாளர்களுக்கு ஆய்வுக்கூட்டம் அம்மாபேட்டையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியுள்ளதாவது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் 90 களப்பணியாளர்கள் விதம் மொத்தம் 360 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் விநியோகித்தல் மேலும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருபவரை தடுக்கும் பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |