Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஒரே நாளில் தலா மூன்று பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் ஒருவரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 4 பேரும் என மொத்தம் 11 பேர் கொரோணாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,395 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 59 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |