Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு…? வெளியாகப்போகும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான அரசின் அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 9 ,344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் 2 மணி நேரத்திற்குப் பின்னர் நிறைவடைந்தது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பிளஸ்டூ தேர்வு குறித்த முடிவுகள் வெளியாகும் என்று தெரிய படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பில்லை என்றும், கட்டுப்பாடுகள் மட்டும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வர உள்ளதாகவும், உணவகங்களில் இனி பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |