Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 07…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 07

கிரிகோரியன் ஆண்டு : 219_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 220_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 146 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள் :

கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும்  மக்கெடோனியர்களுக்கும்  இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

461 – உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

626 – அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர்.

768 – இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

936 – முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார்.

1714 – உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது.

1786 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது நடுவண் தொல்குடி இந்திய சிறப்புப் பகுதி அமைக்கப்பட்டது.[1]

1819 – கொலம்பியாவின் பொயாக்கா என்ற இடத்தில் எசுப்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றார்.

1832 – இலங்கையில் கொழும்பு சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.[2]

1890 – சுவீடனில் அன்னா மான்சுடொட்டர் என்பவர் கடைசிப் பெண்ணாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

1898 – யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[3]

1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1927 – ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

1933 – ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

1944 – ஆர்வர்டு மார்க் I என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட  கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது.

1960 – ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 – தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க மறுத்த கனடிய-அமெரிக்க மருந்தியலாளர் பிரான்செசு கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

1964 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் மீது வட வியட்நாமியப் படைகளின் தாக்குதல்களைக் கையாளுவதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சனுக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.

1970 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது.

1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.

1987 – லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1989 – எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கி லேலண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

1990 – வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர்.

1998 – தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 212 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1999 – செச்சினிய-ஆதரவு இசுலாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர்.

2006 – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

2008 – தெற்கு ஒசேத்தியா தொடர்பான உருசிய-ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது.

2017 – இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஆக்சிசன் தரப்படாமல் இறந்தனர்.

இன்றைய தின பிறப்புகள் : 

1642 – உமறுப் புலவர், தமிழகப் புலவர்

1702 – முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748)

1876 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது, உளவாளி (இ. 1917)

1912 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)

1925 – மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்திய உயிரியலாளர்

1928 – யேம்சு ராண்டி, கனடிய-அமெரிக்க நடிகர்

1933 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2012)

1946 – ஜான் மேத்தர், அமெரிக்க விண்மீனியல் அறிஞர்

1948 – கிறெக் சப்பல், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1950 – ஒசி அபேகுணசேகரா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)

1958 – மகேசு தத்தானி, இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர்

1963 – நிக் கிலெஸ்பி, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்

1966 – ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியா நிறுவனர்

1975 – சார்லீசு தெரன், தென்னாப்பிரிக்க-அமெரிக்க நடிகை

1978 – அலெக்சாண்டர் அஜா, பிரெஞ்சு இயக்குநர்

இன்றைய தின இறப்புகள் : 

1941 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் (பி. 1861)

1974 – வாணிதாசன், புதுவைத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1915)

1996 – கிருஷாந்தி குமாரசுவாமி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டவர் (பி. 1977)

2013 – ச. சபாநாயகம், ஈழத்து மரபுவழி ஓவியர்

2014 – சுருளி மனோகர், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்

2018 – மு. கருணாநிதி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1924)

இன்றைய தின சிறப்பு நாள் :

குடியரசு நாள் (ஐவரி கோஸ்ட்)

Categories

Tech |