ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது ,கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவை சேர்ந்த ரவிகுமார் தாஹியா , ஈரான் நாட்டை சேர்ந்த அலிரிஜா நோஸ்ராடோலாவுடன் மோதினார். இதில் இறுதிப் போட்டியில் 9-2 என்ற கணக்கில் அலிரிஜாவை, தோல்வியடையச் செய்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதைத்தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த மற்றொரு முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் ,காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுகளில் வெற்றி பெற்றார்.
இறுதிப்போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த தகுட்டோ ஓட்டோகுரோவுடன் மோத இருந்தார். ஆனால் இதற்கு முன் ஆடிய போட்டிகளின் போது ,அவரது வலது முழங்காலில் அடிபட்டதால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவர் வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பினார்.