சேலம் மாவட்டத்தில் வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு மையத்தில் 1300 பருத்தி மூட்டைகள் மொத்தம் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனை கூட்டுறவு மையத்தில் பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த பருத்தி ஏலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர் மற்றும் சேலம் பகுதியிலுள்ள விவசாயிகள் ஏலத்திற்க்காக பருத்தி மூட்டைகள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் டி.டி.எச் ரக பருத்தி 100 கிலோ, 17 ஆயிரத்து 550 முதல் 9 ஆயிரத்து 90 வரையிலும், பி.டி. ரக பருத்தி 100 கிலோ, 6 ஆயிரத்து 690 முதல் 7 ஆயிரத்து 819 வரை ஏலம் போனது. இதனையடுத்து மொத்தம் 1300 பருத்தி மூட்டைகள் மொத்தம் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர்.