பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி துருவம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர்கள் துரைசாமி மகன்கள் வீராசாமி, கணேசன். வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு மொபட், ஒரு மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது மொபட்டும், எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் அடுத்தடுத்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
அதில் செல்வராஜ் உட்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு காவல்துறையினர் 3 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.