ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த ,இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்தார்.
நேற்று நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 2 சிக்சர்களை அடித்து விளாசினார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 217 சிக்சர்களை அடித்து விளாசியுள்ளார். இதனால் இந்திய வீரர்களில் அதிக சிக்சரை அடித்து விளாசிய வீரர், என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே கேப்டனாக தோனி 216 சிக்சர்களை அடித்து இருந்தார்.
தற்போது இந்த சாதனையை ரோஹித் சர்மா தட்டிச்சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில், பஞ்சாப் கிங்ஸ் வீரரான கிறிஸ் கெய்ல் 351 சிக்சர்களும் ,ஆர்சிபி வீரரான டி வில்லியர்ஸ் 237 சிக்சர்களும் எடுத்து இருந்தனர் . இதற்கடுத்து ரோஹித் சர்மா 217 சிக்சர்களை அடித்து மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.