மாரடைப்பு காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு செலுத்தியவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று காலை மாரடைப்பு காரணத்தால் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அவரின் உடலுக்கு பல பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரின் சமூக சேவைகளை பாராட்டி அவருக்கு போலீஸ் மற்றும் அரசியல் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது .
https://www.youtube.com/watch?v=3j8sKUKSQ38
அதன்படி மேட்டுக்கம்பம் மின் மயானத்தில் 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவரது உடலுக்கு மகன் ஸ்தானத்தில் மகள் தேஜாஸ்வினி இறுதி சடங்குகளை செய்தார் .