நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றுவோம் என நடிகர் விஜய் ரசிகர்கள் சபதம் எடுத்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நடிகர் விவேக் அப்துல் கலாம் அய்யாவின் வேண்டுகோள்படி ஒரு கோடி மரக்கன்றுகள் நட முடிவு செய்திருந்தார். இதையடுத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வந்தார். அந்த வகையில் விவேக் சுமார் 33 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில ஆண்டுகளில் ஒரு கோடி மரம் என்ற இலக்கை விரட்டி விடுவார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென நேற்று காலமாகிவிட்டார். இதனால் அவரது கனவு நனவாகாமல் போய்விட்டது. இந்நிலையில் விவேக்கின் இந்த கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் சபதம் எடுத்துள்ளனர். மேலும் அவர்கள் மரம் நடும் பணிகளையும் தொடங்கி விட்டனர் .