இன்று 10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல் .
14வது ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தொடக்க வீரர்களாக விராட் கோலி -தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் .இதில் விராட் கோலி முதல் ஓவரிலேயே 6 பந்துகளில் , 5 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .இதன் பின் களமிறங்கிய ராஜட் படிதார் 2 பந்துகளில் ,1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார் .அடுத்து மேக்ஸ்வெல் களமிறங்க, ஆர்சிபி அணி 8 ஓவர்களில் 2விக்கெட் இழந்து , 68 ரன்களை குவித்துள்ளது .