விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஷங்கர் ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் பணிகளை செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல் தற்போது அரசியலில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஷங்கர் தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களை இயக்குவதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.அந்தவகையில் தமிழில் அவர் இயக்கிய ‘அந்நியன்’ படத்தை ஹிந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த அறிவிப்பு வெளியானது முதல் ஷங்கர் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இப்படி பல விமர்சனங்களை சந்தித்து இப்படத்தின் ரீமேக்குக்கு சிக்கல் ஏற்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் ஷங்கர் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார் என்று தகவல் உள்ளது. அதன்படி இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரும் 2022ஆம் ஆண்டு இப்படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் தெரியவந்துள்ளது.