Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KKR : ஆர்சிபி 15 ஓவரில் 3 விக்கெட் …! மெக்ஸ்வெல் அரைசதம் அடித்து அசத்தல் …!!!

இன்று 10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல் .

14வது  ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில், தொடங்கியது  . இதில்  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி  -தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் .இதில்  விராட் கோலி முதல் ஓவரிலேயே 6 பந்துகளில் , 5 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .இதன் பின் களமிறங்கிய  ராஜட்  படிதார்  2 பந்துகளில் ,1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார் .அடுத்து மெக்ஸ்வெல் களமிறங்க,  ஆர்சிபி அணி  8 ஓவர்களில்  2விக்கெட் இழந்து , 68 ரன்களை குவித்துள்ளது .

இதன் பிறகு தேவ்தத் படிக்கல் -மெக்ஸ்வெல் ஜோடி ஆடியது .இதில் படிக்கல் 28 பந்துகளில் ,25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .மெக்ஸ்வெல் அட்டமிழக்காமல் 44 பந்துகளில் ,76 ரன்களை எடுத்து அரைசமடித்தார் . 15 ஓவரில் ஆர்சிபி  அணி ,3 விக்கெட் இழப்பிற்கு  134 ரன்களை எடுத்துள்ளது .

Categories

Tech |