திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் தேதிகள் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்க மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல படங்கள் திரையரங்கில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயங்கி வருகிறது.
இந்நிலையில் சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தியேட்டர்கள் முழுவதும் மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் இப்படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளது.