நெல்லையில் நடிகர் விவேக்கின் மறைவிற்காக கட்சி சார்பில் மரக்கன்று நட்டு தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள்.
தமிழகத்தில் தமிழ் திரையுலக நடிகரான விவேக்கை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இவரின் காமெடியை கண்டு துக்கத்திலிருக்கும் நபர்கள் கூட சிரித்து விடுவார்கள். இவ்வாறு தமிழ்த்திரையுலகையே ஆட்டி படைத்த நடிகர் விவேக் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பல இடங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விவேக்கினுடைய நினைவைப் பறைசாற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.