சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து டெல்லி மாநிலம் ஒரு வருடத்தில் 3 முதல்வர்களை இழந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் மரணத்தை தொடர்ந்து ஒரு வருடத்தில் 3 முதலமைச்சர்களை இழந்து டெல்லி தவிக்கின்றது.
இதற்க்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதலைவராக இருந்த மதன் லால் குரானா காலமானார். இதே போல ஜூலையில் டெல்லியில் 3 முறை மாநில முதல்வராகவும் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித் மாரடைப்பினால் காலமானார். இதையடுத்து கடந்த 1 வருடத்தில் டெல்லி மாநிலம் 3 முதல்வர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.