Categories
இந்திய சினிமா சினிமா

முதலமைச்சருக்கு மகளாக நடிக்கும் நயன்தாரா…. வெளியான சூப்பர் தகவல்…!!!

முன்னணி நடிகை நயன்தாரா முதலமைச்சரின் மகளாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. மோகன்லால் அரசியல்வாதியாக நடித்திருந்த இப்படம் இந்தியாவையே மிரள வைத்தது. இதை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.

இப்படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். மோகன் ராஜா இயக்கும் இப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ளது. லூசிபர் படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழுவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நயன்தாரா இப்படத்தில் நடிப்பதை மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது மீண்டும் நயன்தாராவிடமே பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருகிறது. இதனடிப்படையில் இப்படத்தில் நயன்தாரா இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |