Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டுன்னு அங்கிருந்து குதிச்சிட்டான்… பதறிய வாகன ஓட்டிகள்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி மேம்பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அதிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபர் மேம்பாலத்தின் கீழ் இருக்கும் ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது விழுந்து சாலையில் உருண்டு விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்னால் வரும் வாகனங்கள் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக கை காட்டி சைகை மூலம் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த அந்த வாலிபரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் மாரிமுத்து என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாரிமுத்து அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடையில் வேலைப் பார்த்து வந்ததும், ஊருக்கு செல்வதாக விடுப்பு எடுத்து சென்ற மாரிமுத்து குடும்ப பிரச்சினை காரணமாக மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |