செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தென்னாடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லோகநாதன் என்ற மகன் இருந்தார். இவர் நாகமலையிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லோகநாதன் பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது நாகமலையிலிருந்து கல்குவாரி சென்ற லாரி லோகநாதன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லோகநாதன் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லோகநாதனை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் கல்குவாரியை மூடக்கோரியும், கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரியும் மேலும் லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.