பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா மாவட்டத்திலிருக்கும் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் பாடம் நடத்தும்போதும் அடிக்கடி மாணவியின் அருகில் சென்று தொட்டு பேசியுள்ளார்.
ஆனால் ஆசிரியரின் நோக்கத்தை அறியாமல், அந்த சிறுமி சாதாரணமாக பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அனைத்து மாணவர்களும் பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாரான சமயத்தில், விகாஸ்குமார் அந்த மாணவியை மட்டும் அழைத்து சிறப்பு வகுப்பு ஒன்று இருக்கிறது. சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு போகலாம் என்று கூறியுள்ளார்.
இதன் அர்த்தத்தை அறியாத அந்த மாணவி, அனைத்து மாணவர்களும் சென்றுவிட்ட நிலையில் தனியாக வகுப்பில் இருந்துள்ளார். அதன்பிறகு விகாஸ் குமார் சிறிது நேரம் பாடம் நடத்துவது போன்று நடத்திவிட்டு, அதன் பின்பு அவரது மொபைலை கொடுத்து ஆபாசமான படங்களை பார்க்க வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அந்த மாணவி அவரை தள்ளி விட்டு தப்ப முயன்றுள்ளார். ஆனால் விகாஸ் குமார் அந்த மாணவியை இழுத்து கீழே தள்ளி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் அவரிடம் இருந்து போராடி அந்த மாணவி எப்படியோ தப்பி வீட்டிற்கு ஓடிசென்று, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி அழுதிருக்கிறார்.
இதைக் கேட்டவுடன் மாணவியின் பெற்றோர் ஆத்திரமடைந்து, உறவினர்களை திரட்டிக் கொண்டு உடனடியாக பள்ளிக்கு சென்றிருக்கின்றனர். அங்கிருந்த விகாஸ் குமாரை அனைவரும் சேர்ந்து, அடித்து அவரின் முகத்தில் பேனா மையை ஊற்றி அடித்து உதைத்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.