Categories
உலக செய்திகள்

“கார்ல அடிபட்டத்துக்கு இப்படி ஒரு சான்ஸா!”.. கனடா செல்லும் அதிர்ஷ்டக்கார நாய்க்குட்டி..!!

கர்நாடகாவில் 2 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளான நாய்க்குட்டி தற்போது கனடா செல்லவிருக்கிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி என்ற நகரில் ரேடியோ பார்க்கிற்கு அருகில் இரண்டு மாத  நாய்க்குட்டி ஒன்று சுமார் 2 வருடங்களுக்கு முன்பு வாகனத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த “Human World For Animals” என்ற அமைப்பு அந்த நாயை பாதுகாப்பாக மீட்டு பெங்களூர் மற்றும் சென்னையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் டெல்லி கொண்டு செல்லப்பட்டு, அங்கு விலங்குகளை பராமரிக்கும் “Kannan Animal Wellfare” அமைப்பினால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நாயின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. தற்போது அந்த நாய்க்குட்டிக்கு இரண்டு வயதாகிறது.

இந்நிலையில் அந்த நாய் குறித்த தகவலை இணையதளங்களில் அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அப்போது கனடாவில் வசிக்கும் ஒரு பெண் இதனை அறிந்து அந்த நாயை வளர்க்க முடிவு எடுத்துள்ளார். இதனால் அந்த நாய்க்குட்டிக்கு “அனந்த்யா” என்று பெயரிடப்பட்டு கனடாவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |