Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ இது விபத்து இல்லையா…? பதற வைக்கும் CCTV காட்சிகள்… சென்னையில் பரபரப்பு…!!

விபத்தில் சிக்கி பலியான வாலிபர் தானாகவே சென்று தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கல்யாண சட்டி நகரில் வினோத் வாலிபர் வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் எண்ணூர் விரைவு சாலையை கடந்து செல்ல முயற்சி செய்தபோது, அங்கு வந்த கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அச்சத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணார்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் வினோத்தின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதனையடுத்து காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது வினோத் சாலையின் தடுப்பு சுவரை தாண்டி வந்து நின்று அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரியின் நடுப்பகுதியில் தானாக படுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |