தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சராகவும், டெல்லியின் முன்னாள் முதல்வராகவும் இருந்த சுஷ்மா சுவராஜ் (வயது 67). இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதலைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சுஷ்மா சுவராஜுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “நாட்டு மக்களின்பால் பேரன்பு கொண்ட திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்களை இழந்துவாடும் அனைத்து தொண்டர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
முன்னாள் மத்திய அமைச்சர், தில்லியின் முன்னாள் முதல்வர், பொறுப்பு பிரதமர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் அவர்கள். இந்தியாவில், மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழால் புகழாராம் சூட்டப்பட்டவர்
முன்னாள் மத்திய அமைச்சர், தில்லியின் முன்னாள் முதல்வர், பொறுப்பு பிரதமர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் #SushmaSwaraj அவர்கள். இந்தியாவில், மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழால் புகழாராம் சூட்டப்பட்டவர். #RIPSushmaJi
— O Panneerselvam (@OfficeOfOPS) August 7, 2019