துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மாவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். 67 வயதுடைய இவர் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் திடீர் மறைவால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். சுஷ்மாவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு. தனிப்பட்ட முறையிலும் இழப்பு. அவர் ஒரு சிறந்த நிர்வாகி, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குறிப்பிடத்தக்க சொற்பொழிவாளர். துயரமடைந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
Deeply shocked by the sudden demise of Smt. Sushma Swaraj. Her death is a huge loss to the country & personal loss to me. She was an excellent administrator, outstanding Parliamentarian & a remarkable orator. My heartfelt condolences to bereaved family members. #sushma
— Vice President of India (@VPIndia) August 6, 2019