ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஆயிஷா. இதைத்தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த சீரியல் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகனாக விஷ்ணு நடித்து வருகிறார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர். மேலும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஷ்ணு, ஆயிஷா இருவரும் இணைந்து நடித்து வரும் சத்யா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த 2019 மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் 600 எபிசோடுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.