Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெப்பத்தால் ஏற்பட்ட விளைவு….. முட்டை விலை 485 காசுகளாக உயர்வு…. அதிகாரி தெரிவித்த தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை விலையை 485 காசுகளாக  அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் தாங்க முடியாமல் கோழிப்பண்ணையில் பல லட்சம் கோழிகள் இறந்து விட்டன. இதனால் முட்டை உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.  மேலும் கோழித் தீவணமான சோயாப் புண்ணாக்கு விலையும் அதிகரித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையில் பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475  காசுகளாக இருந்து வந்தது. இதனையடுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை அதிகாரிகள் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்துள்ளனர். தற்போது முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக உயர்ந்துள்ளது.

Categories

Tech |