மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு திமுக தலைவர்கள் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 7_ஆம் தேதி காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது.
அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. சென்னையில் வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி மெரினா-வில் நிறைவடைந்தது. இதில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். பின்னர் துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, உதயநிதி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.