தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 92 அதிகரித்துள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.