Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று அச்சுறுத்தல்… பொதுமக்களுக்கு இது கட்டாயம்… சுகாதாரத்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பொது மக்கள் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முககவசம் அணிவது தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.200 முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருமாந்துறை டோல்கேட் பகுதியில் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் சுகாதாரத் துறையினர் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரையும் கூறப்பட்டது.

Categories

Tech |