Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீசை பார்த்து பயத்தில் ஓடிய கோவிந்தராஜ்…. விசாரணையில் கட்டுக்கட்டாக பணம்…. ஈரோட்டில் ஷாக் சம்பவம் …!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து, அதை புழக்கத்தில் விட முயன்றவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

அந்தியூர் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சிக்க , அவரை துரத்தி பிடித்தனர். அவரை சோதனையிட்டதில் அவரிடம் இருபதாயிரம் மதிப்புள்ள இருநூறு மற்றும் ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததும்,  அதனை புழக்கத்தில் விடுவதற்காக அவர் கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர் பவானி பழனிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பதும், அவர் கொடுத்த தகவலின் பேரில் மூகம் பாளையத்தில் உள்ள வீடு ஒன்றில் செல்வம் என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளையும், அதை தயாரிக்க பயன்படுத்திய அச்சு இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான பாலசுப்ரமணியத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |