தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அண்மையில் பெய்த மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நகர், கணேஷ் நகர், சிங்கப்பூர் ராமையா நகர், ஆசிரியர் காலணி ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழைநீர் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தண்ணீரை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் கடலையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .