Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஒரு பாட்டில் கூட உடையல்ல….. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… உயிர் தப்பிய டிரைவர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மது ஏற்றி கொண்டு சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியிலிருந்து லாரியில் மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வலங்கைமான் பகுதியிலுள்ள வெட்டாறு பாலம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் லாரியிலிருந்த மது பாட்டில்கள் மூடப்பட்டிருந்ததால் மது பாட்டில்கள் சிதறாமல் இருந்துள்ளது. மேலும் டிரைவரும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |