நாமக்கல் மாவட்டத்தில் காகித ஆலையில் பணிபுரியும் போது கொதிகலனியினுள் தவறி விழுந்து ஊழியர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் காகித ஆலையில் 6 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்ற கதிரேசன் கொதிகலன் மேல் உள்ள தடுப்பில் நின்று வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது திடீரென தடுப்பு உடைந்ததில் கதிரேசன் கொதிகலனியினுள் தவறி விழுந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கதிரேசன் இறந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.