நடந்த ஐபில் போட்டிகளில் ,தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ஆர்சிபி அணி, 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .
14வது ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில், நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆர்சிபி அணி ,இறுதியாக 20 ஓவர் முடிவில் ,4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது .குறிப்பாக வில்லியர்ஸ் ,மெக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக விளையாடினர் .
205 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ராணா – ஷுப்மான் கில் களமிறங்கினர் .இதில் 21 ரன்னில் ஷுப்மான் கில் ஆட்டமிழக்க , அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 25 ரன்னில் வெளியேறினார் .இதன் பிறகு ராணா 18 ரன்களில் அவுட் ஆனார் .அடுத்து அணியின் கேப்டனான மோர்கன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதன் பிறகு முக்கிய 5 விக்கெட்டுகளை இழந்ததால் கொல்கத்தா அணி தடுமாறியது . இறுதியாக களமிறங்கிய அந்த்ரே ரஸல் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் . இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 166 ரன்களை எடுத்து படுதோல்வியை சந்தித்தது. எனவே ஆர்சிபி அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.