11 வது லீக் போட்டியில் , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல் .
14வது ஐ.பி.எல் தொடரின் ,11 வது லீக் போட்டியில் , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், நடைபெறுகிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது . இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸில் தொடக்க வீரர்களாக கே.ல். ராகுல் -மயங்க் அகர்வால் களமிறங்கினர். இருவருமே தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை காட்டினர். இருவரின் பாட்டனர்ஷிப் சிறப்பாக அமைந்ததால் ,எதிரணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .
இதில் மயங்க் 69 ரன்களில் வெளியேறினார் . அடுத்து கிறிஸ் கெயில் களமிறங்கினார் . கே.ல். ராகுல் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இவரை தொடர்ந்து கிறிஸ் கெயில் 11 ரன்னில் அவுட் ஆனார் .இதன் பிறகு தீபக் ஹூடா களமிறங்கினார் . பூரன் 9 ரன்னில் வெளியேற ,அடுத்து ஷாருக் கான் – தீபக் ஹூடா இருவரும் அட்டமிழக்காமல் விளையாடினர் . தீபக் ஹூடா 22 ரன்கள் ,ஷாருக் கான் 15 ரன்கள் எடுக்க , இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ,195 ரன்களை குவித்தது . 196 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ,டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடி வருகிறது .