மதுரையில் ஒரே நாளன்று 235 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இது குறித்த விழிப்புணர்வுகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது மீண்டும் பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் மதுரையில் ஒரே நாளன்று 235 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,256 நபர்கள் ஆவார். மேலும் தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,942 ஆகும்.