சுஷ்மா சுவராஜ் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்
பாஜகவை சேர்ந்த 67 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இவரது மறைவால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ஒரு அசாதாரண அரசியல் தலைவர், ஒரு திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஒரு விதிவிலக்கான நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவு குறித்து நான் கேள்விப்பட்டேன். இந்த மணிநேர துக்கத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
I’m shocked to hear about the demise of Sushma Swaraj Ji, an extraordinary political leader, a gifted orator & an exceptional Parliamentarian, with friendships across party lines.
My condolences to her family in this hour of grief.
May her soul rest in peace.
Om Shanti 🙏
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019