Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுக்கு தடுப்பூசி போடும் பணி…. கள்ளழகர் கோவில்…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் ஆங்காங்கே கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநில, மத்திய அரசு ஏற்பாடு செய்து சுகாதாரத் துறையின் மூலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் கள்ளழகர் கோவிலில் வைத்து அதில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர், அலுவலர் மற்றும் காவலர்கள் உட்பட பல நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதனை மாவட்டத்தின் சுகாதார பணியின் துணை இயக்குனரான அர்ஜுன் குமார் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். இதில் கள்ளழகர் கோவில் நிர்வாக அதிகாரியான அனிதா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |