Categories
உலக செய்திகள்

முயலின் மதிப்பு 1 லட்சம்….திருடியவனுக்கு அடித்த மெகா ஆஃபர் ….!!!

பிரிட்டனில்  சிறப்பு அம்சங்கள் பொருந்திய முயல் ஒன்று சனிக்கிழமையில் இருந்து காணவில்லை.

பிரிட்டன் வொர்செஸ்டர்ஷைர் அருகே ஸ்டூல்டன் கிராமத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ‘டாரியஸ்’ என்ற முயலை சில வருடங்களாக மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்திருக்கிறார். தற்போது கடந்த சனிக்கிழமையன்று இரவில் தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த முயலை காலையில் பார்த்தபோது முயலை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வர்ட்ஸ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்து போன எட்வர்ட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்நாள் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்க கூடிய நாளாக இருந்துள்ளது .இதுபோன்ற ஒரு பெரிய இழப்பை நான் கண்டதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும டாரியஸை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசாக தருவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்து  ஆச்சரியமடைந்தவர் என்னது புயலுக்கு இவ்வளவு கெடுபிடியா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தபோது தொலைந்து போன டாரியஸை முயலின் சிறப்பு அம்சங்கள் பழுப்பு-வெள்ளை நிறம் கொண்ட இந்த டாரியஸ் என்ற முயல் சுமார் 129 செ.மீ.நீளம் கொண்டது.

மேலும், உலகிலேயே மிகப்பெரிய முயல் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு 2010-ல் அங்கீகாரம் அளித்துள்ளது.பரிசு தொகை தெரிந்தால்  இந்த முயலை திருடிய திருடனே கூடிய விரைவில் முயலை கொண்டுவந்து விட்டு விடுவான் என்று கூறிவருகின்றனர்.

Categories

Tech |