இலங்கையில் அதிகமாக பரவி வரும் கொரோன வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளில் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனவைரஸ் இந்த வருடம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர்.இலங்கையில் தற்போது கொரோனாவின் அச்சுறுத்தல் மிகவேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதாக அரசின் மூத்த சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு மட்டும் 52 710 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கியமாக இதில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 1593 எனவும் கூறியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்திய பிறகே அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆகையால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் உள்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாதம் முதலே கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 3480 உயர்ந்துள்ளது. இதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த சூழலை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்பவர்கள் குறித்து மேலாண்மைத் திட்டங்களை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. மேலும் இதனைதொடர்ந்து இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.