ஆப்கானிஸ்தான் மசூதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை மர்ம நபர் குருவியை போல் சுட்டு தள்ளியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணம் ஜலாலாபாத் பகுதியைச் சேர்ந்த மசூதி ஒன்றில் நேற்று இரவு கையில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்தவர்களின் மீது திடீரென எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர சம்பவம் குறித்து கவர்னர் ஜியா உல் ஹக் அமர்கெல் என்பவர் உறுதி செய்துள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் முதற்கட்ட விசாரணையில் ஹாஜி அப்துல் வஹாப் என்பவரின் 5 மகன்களும் 3 உறவினர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்தது .
மர்ம நபருக்கும் அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே தனிப்பட்ட பகை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் . இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் எவரையும் கைது செய்ய முடியவில்லை எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யும் வரை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று நேற்று மாலை ஹெராத் மாகாணத்தின் ஜிண்டாஜன் மாவட்டத்தில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்துள்ளார்கள். இதனால் தொடர்ந்து நடைபெறும் இந்த மர்ம நபர் தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.