ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை வீழ்த்தி ,6 விக்கெட் வித்தியாசத்தில், டெல்லி அணி வெற்றி பெற்றது .
நேற்று இரவு மும்பை வான்கண்டே மைதானத்தில் நடைபெற்ற , 14வது ஐ.பி.எல் தொடரின் ,11 வது லீக் ஆட்டத்தில் , டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது . இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க வீரர்களாக கே.ல். ராகுல் -மயங்க் அகர்வால் களமிறங்கினர். இருவருமே தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை காட்டினர். இருவரின் பாட்டனர்ஷிப் சிறப்பாக அமைந்ததால் ,எதிரணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் .இதில் மயங்க் 69 ரன்கள் , கிறிஸ் கெயில் 11 ரன்கள் , ராகுல் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் . இதன் பிறகு பூரன் 9 ரன்னில் வெளியேற ,அடுத்து ஷாருக் கான் – தீபக் ஹூடா இருவரும் அட்டமிழக்காமல் விளையாடினர் .
தீபக் ஹூடா 22 ரன்கள் ,ஷாருக் கான் 15 ரன்கள் எடுக்க , இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ,195 ரன்களை எடுத்து . 196 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ,டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் – பிரித்வி ஷா ஜோடி களமிறங்கியது . தொடக்கதிலிருந்தே இருவரின் பாட்டனர்ஷிப் சிறப்பாக அமைத்தது . குறிப்பாக ஷிகர் தவான் 49 பந்துகளில் , 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை அடித்து விளாசினார்.தவான் சதம் அடிப்பார் ,என்று எதிர்பார்த்தபோது ,92 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .இதன் பின் ஸ்டீவன் சுமித் 9 ரன்கள் , கேப்டன் ரிஷாப் பண்ட் 15 ரன்கள் எடுத்து வெளியேறினர் . இறுதி கட்டத்தில் டெல்லி அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து, 198 ரன்களை எடுத்து , வெற்றி பெற்றது .இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி , டெல்லி அணி 2 வது வெற்றியை கைப்பற்றியது .