முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். இதற்காக நேற்றே மம்தா பானர்ஜி சென்னை வந்தடைந்தார். இதை தொடர்ந்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் நடைபெறுகின்றது.