Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… திடீரென சாய்ந்த மரம்… சலூன் கடை சேதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையில் பேருந்து நிலையத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் அருகிலிருந்த சலூன் கடை சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மைநாயக்கனூர், கொடைரோடு, சல்லிப்பட்டி, பள்ளப்பட்டி, ஊத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கொடைரோடு பேருந்து நிலையம் அருகில் சலூன் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் மீது பேருந்து நிலையத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. அதில் கடையின் முன் பகுதி முழுமையாக சேதம் அடைந்தது.

Categories

Tech |