Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை! ATM பாஸ்வேர்ட் இப்படி வைத்ததால்…. ரூ.100000 பறிபோனது…!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஏடிஎம் திருட்டு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் ஏடிஎம் நம்பரை வைத்து பணம் திருடுவது மட்டுமல்லாமல் தற்போது புதிய முறையிலும் திருட்டில்  ஈடுபட்டு வருகின்றனர். நாம் பெரும்பாலும் ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு எளிதாக இருக்கும் வகையில் 1,2,3,4 என்ற எண்களை பயன்படுத்துவதுண்டு. ஒருசிலர் பிறந்த தேதியை பாஸ்வேர்டாக வைத்துக்கொள்வார்கள். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அலுவலகத்திற்கு சென்ற பின்னர் தனது செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதாக மெசேஜ் வந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஏடிஎம், ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து பூட்டிவிட்டு வந்து பின்னர் எப்படி திருட்டு போய் இருக்கும்? என்று யோசித்துள்ளார். இதையடுத்து வெளியே சென்று பார்த்த போது இருசக்கர வாகனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ஏடிஎம் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது இதையடுத்து காவல் நிலையத்திற்கு அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த காவல்துறையினரின் விசாரணையில் சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது திருடன் வண்டியின் பூட்டை உடைத்து ஏடிஎம் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திருடியுள்ளார்.

இதையடுத்து ஆதார் கார்டில் உள்ள அந்தப் பெண்ணின் பிறந்த தினம்தான் பாஸ்வேர்ட் ஆக  இருக்கும் என்று யூகித்து அந்தக் திருடன் பிறந்த தினத்தை பதிவிட்டு முடிந்தவரை பணத்தை திருடிச் சென்றுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர். அதாவது பிறந்த தினத்தை பாஸ்வேர்டாக பயன்படுத்துதல், 1234 ஆகிய எளிய எண்களை பயன்படுத்துதல், கடினமான எண்ணாக இருந்தால் அதை பேப்பரில் எழுதி வைத்தல் போன்றவற்றை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |