Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பலத்த காற்றுடன் பெய்த மழை… சாலையில் விழுந்த புளியமரம்… போக்குவரத்து பாதிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே எ.புதூரில் சூறைக்காற்று வீசியதால் புளிய மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. மேலும் மின்சார வயர் மீது அந்த மரத்தின் கிளைகள் விழுந்ததால் சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. சில இடங்களில் சூறக்காற்று காரணமாக வீட்டின் மீது மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. சாலையில் மரம் விழுந்த போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் சுமார் அரை மணி நேரமாக கொடைரோடு-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்சாரம் துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் விரைந்து வந்து அந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து கொடைரோடு பகுதியில் குளிர்ச்சி நிலவியது.

Categories

Tech |