வீட்டில் இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் கேசவமூர்த்தி – கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் கேசவமூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காலையில் கேசவமூர்த்தி வேலைக்கு செல்வதாக தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்றுயுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்த கேசவமூர்த்தி வீட்டில் தன் மனைவி இல்லாததை கண்டு அதிர்ந்து போனார்.
இதனால் கேசவமூர்த்தி தன் மனைவியை உறவினர் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கேசவமூர்த்தி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.