மோட்டார் சைக்கிளில் நின்ற படியும் கீழே விழுந்த படியும் வாலிபர் சாகசம் செய்த வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவேரி ஆறு, மெயின் அருவி போன்ற பகுதிகளில் குளித்தும், பரிசில் சென்றும் மகிழ்ச்சியாக இருப்பார். இந்நிலையில் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த ஒரு வாலிபர் ஆபத்தை உணராமல் ஓடும் மோட்டார் சைக்கிளில் நின்ற படியும் கீழே குதித்த படியும் மலைப்பாதையில் சாகசம் செய்துள்ளார்.
இந்த செயல்களை செல்போனில் வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஆபத்தை உணராமல் வாலிபர் சாகசம் செய்த வீடியோவை பார்த்த வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.