Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… தெருவுக்கு அதிரடி “சீல்”… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

திண்டுக்கல்லில் ஒரே பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் நகர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று ஒய்.எம்.ஆர்.பட்டி சோனைமுத்து தெரு பகுதியில் புதிதாக 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அந்த தெரு அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சுகாதாரத்துறையினர் அந்த தெருவை தகரத்தால் மூடி “சீல்” வைத்துள்ளனர். அங்கு தன்னார்வலர்கள் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |