தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன்.இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இப்படத்தை முடித்தவுடன் தமிழில் அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 3வது முறையாக தனுஷ் மீண்டும் இணைகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் உருவாகும் தனுஷின் அடுத்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.